பியோங்யாங்: வடகொரியா, கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனை செய்தது.
உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரியா இணை படைத்தளபதி கூறியதாவது: "வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணை 230 கி.மீ தொலைவுக்கு 30கி.மீ உயரத்தில் சென்றது. உலக நாடுகள், கோவிட்-19 வைரஸால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது" என தெரிவித்தார்.