கன்னி ராசிக்கான சனிப்பெயர்ச்சி மிக சிறப்பான பலன்கள் பெற உள்ளது. கன்னி ராசிக்கு 2020 முதல் 2022 வரை எப்படிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்...
அர்த்தாஷ்டம சனி முடிவு

சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24ஆம் தேதி பெயர்ச்சி ஆகின்றார். இவர் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
அர்த்தாஷ்டம சனி முடிவு
கன்னி ராசிக்கு இதுவரை அர்த்தாஷ்டமச் சனி இருந்தது. இதனால் பல கஷ்டங்கள், சோதனைகள், நோய்கள் கொடுத்திருந்தது. தாய்க்கு உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சினைகள் கொடுத்தது. வாகன பிரச்சினை, விபத்து, வாகனம் தொலைதல் என பல்வேறு செலவுகளை கொடுத்திருந்தது. பலர் தங்களின் வேலை இழக்க நேரிட்டது.