நாம் வணங்கும் கடவுளுக்கு உண்மையில் பூஜை எப்படி செய்ய வேண்டும்? அதன் விதிகள், முறைகள் என்னென்ன? இப்படி பூஜை செய்தால் என்ன கிடைக்கும்? வாங்க தெரிஞ்சுக்கலாம் .
இந்து தர்மத்தின் படி கடவுளை வணங்குவதற்கு முன் நாம் சில பூஜைகளை செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்யும் பூஜைகளுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.
அதன்படி செய்யும் போது கடவுளின் அனுக்கிரகத்தை முழுமையாக நீங்கள் பெறலாம். ஆனால் இப்பொழுது எல்லாம் நாம எப்படி சாமி கும்பிடுகிறோம், எப்படி பூஜை செய்கிறோம், எல்லாவற்றிலும் அரக்க பறக்கத்தான் ஈடுபடுகிறோம். எதையும் முழுமனதாக செய்வதில்லை.
அபிஷேகம் என்ற பெயரில் தண்ணீரை வேகமாக ஊற்றுகிறோம், பஜனை என்ற பெயரில் மனதார கடவுளை நினைத்து பாடுவதில்லை, ஏதோ கடனாளிகள் மாதிரி தான் செய்கிறோம். இப்படி பூஜை செய்தால் கடவுளின் அருளும் வரமும் எப்படி கிடைக்கும்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். தன்னை மனதார நினைக்கும் பக்தர்களுக்கு கடவுள் கண்டிப்பாக மனம் இறங்குவார். அழுது கண்ணீர் வடித்து நம்முடைய கஷ்டங்களை சொல்லும் போது அவர் காது கொடுக்காமல் இருந்ததில்லை.